Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமேசான் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை! முதல் நாளே அமோகம்

அமேசான் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை! முதல் நாளே அமோகம்

விற்பனை தொடங்கிய முதல் 12 மணி நேரத்திலேயே, இந்தியாவில் உள்ள அனைத்து பின்கோடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

அமேசான் நிறுவனத்தின் பண்டிகைக் கால சிறப்பு விற்பனையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் நாளிலேயே பொருட்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக அமேசான் நிறுவனத்தின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பிரிவு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த அக்.8-ம் தேதி தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 


விற்பனை தொடங்கிய முதல் 12 மணி நேரத்திலேயே, இந்தியாவில் உள்ள அனைத்து பின்கோடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் நாளிலேயே பொருட்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் முதல் நாளிலேயே 44 கோடி வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தை பார்வையிட்டுள்ளனர்.


அமேசான் செயலி தரவிறக்கம் செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களை ஒப்பிடுகையில், இந்த சிறப்பு விற்பனையில் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை 50 மடங்கு அதிகரித்துள்ளது. டிஷ் வாஷர்கள் மற்றும் டிரையர்களின் விற்பனை 60 மடங்கு உயர்ந்துள்ளது. தொலைக்காட்சிகளை பொறுத்தவரை, மக்கள் பெரிய திரைகளை அதிகம் விரும்புகின்றனர்.

விற்பனையான மொத்த டிவிகளில் சுமார் 65 சதவீதத்துக்கும் அதிகமானவை 55 இன்ச் மற்றும் அதற்கும் மேலான அளவை கொண்டவையாகும். பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் காலை உணவுகள் உள்ளிட்ட 'பிரீமியம்' உணவுப் பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், லாண்டரி லிக்விட், ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள் போன்றவற்றின் விற்பனையும் அபரிமிதமாக உள்ளது.

பெரு நகரங்களை காட்டிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
தங்கம், வெள்ளி வர்த்தகத்துக்கு டிஜிட்டல் தளம்
அடுத்த செய்தி
அனுமதி மறுத்த இஸ்ரேல்: நடுவானில் திரும்பிய விமானம்!

தொடர்புடைய செய்திகள்